< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்

டி20 உலக கோப்பை தொடரில் சாம்பியன்...!! உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கிய இந்திய அணி வீரர்கள்

தினத்தந்தி
|
30 Jun 2024 12:01 AM IST

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 11 ஆண்டுகளுக்கு பின்னால், கோப்பையை வென்று டி20 உலக கோப்பை தொடரில் சாம்பியன் ஆகியுள்ளது.

பார்படாஸ்,

9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி பார்படாஸ் நகரில் இன்று நடைபெற்றது. இதில், இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் அடித்தது. தொடர்ந்து, 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் தென் ஆப்பிரிக்கா விளையாடியது. எனினும், தொடக்கத்தில் இருந்து அடுத்தடுத்து, அந்த அணியின் விக்கெட்டுகள் விழுந்தன.

இதனால், இந்திய அணியின் வெற்றி உறுதியானது. தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்களே எடுத்தது. இதனால், 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

போட்டியில் வெற்றி பெற்றதும் ஹர்தீக் பாண்ட்யா, மகிழ்ச்சியில் கண்கலங்கினார். இதேபோன்று, கேப்டன் ரோகித் சர்மாவும் கூட்டத்தில் இருந்து விலகி கண்களில் வழிந்த கண்ணீரை மறைக்க முடியாமல் நடந்து சென்றார். இதேபோன்று விராட் கோலியின் கண்களிலும் கண்ணீர் கசிந்தது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 11 ஆண்டுகளுக்கு பின்னால், கோப்பையை வென்று டி20 உலக கோப்பை தொடரின் சாம்பியன் ஆகியுள்ளது.

மேலும் செய்திகள்