< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை: வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்களின் நெகிழ்ச்சி புகைப்பட தொகுப்பு
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்களின் நெகிழ்ச்சி புகைப்பட தொகுப்பு

தினத்தந்தி
|
30 Jun 2024 12:58 PM IST

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-வது முறையாக உலக 'சாம்பியன்' பட்டத்தை வென்றது.

புதுடெல்லி,

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஒரு மாதமாக அமெரிக்கா மற்றும் வெஸ்ட்இண்டீசில் நடந்து வந்தது. இதில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்தியாவும், தென்ஆப்பிரிக்காவும் இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தன.

இந்த நிலையில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிரிட்ஜ்டவுனில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி 2-வது முறையாக வென்றது.

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணி வீரர்களின் நெகிழ்ச்சி புகைப்படங்கள்:-

மேலும் செய்திகள்