டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்த வெஸ்ட் இண்டீஸ்
|வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பூரன் மற்றும் பவல் அரைசதம் அடித்து அசத்தினர்.
டிரினிடாட்,
9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நாளை ஆரம்பமாக (இந்திய நேரப்படி ஜூன் 2) உள்ளது. இதற்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் இன்று காலை நடைபெற்ற பயிற்சி ஆட்டம் ஒன்றில் வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கியது. 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பூரன் 75 ரன்களும், பவல் 52 ரன்களும், ரூதர்போர்டு 47 ரன்களும் குவித்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக ஆடம் ஜம்பா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதனையடுத்து 258 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் இங்கிலிஷ் 55 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோட்டி மற்றும் அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.