< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை: மிட்செல் மார்ஷ் பந்துவீச மாட்டார் - ஆஸ்திரேலிய பயிற்சியாளர்

கோப்புப்படம்

கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: மிட்செல் மார்ஷ் பந்துவீச மாட்டார் - ஆஸ்திரேலிய பயிற்சியாளர்

தினத்தந்தி
|
31 May 2024 7:17 PM IST

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டத்தில் மிட்செல் மார்ஷ் பந்துவீச மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்,

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் நாளை முதல் ஜூன் மாதம் இறுதிவரை நடைபெற இருக்கிறது. இம்முறை இந்த தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது.

இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றிருக்கும் வேளையில் இந்திய அணியானது 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பிடித்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி அயர்லாந்தை நியூயார்க் நகரில் எதிர்கொள்கிறது.

இந்த தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 6ம் தேதி ஓமனை சந்திக்கிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச மாட்டார் என அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கூறியுள்ளார்.

ஐ.பி.எல் தொடரின் போது ஏற்பட்ட தொடை காயத்தில் இருந்து மீண்டு வருவதால் அவர் பேட்டிங் மட்டுமே விளையாடுவார் என பயிற்சியாளர் கூறினார். டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்களிலும் மிட்செல் மார்ஷ் பந்துவீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்