< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: இந்தியா - கனடா ஆட்டம் மழை காரணமாக ரத்து

தினத்தந்தி
|
15 Jun 2024 9:18 PM IST

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா - கனடா ஆட்டம் நடைபெற இருந்தது.

புளோரிடா,

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற இருந்த 33-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - கனடா அணிகள் விளையாட இருந்தன. புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நடைபெற இருந்த ஆட்டம் மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏ பிரிவின் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ள இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

மேலும் செய்திகள்