< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை: கனவு அணியை வெளியிட்ட ஐ.சி.சி....ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள்
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: கனவு அணியை வெளியிட்ட ஐ.சி.சி....ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள்

தினத்தந்தி
|
1 July 2024 10:17 AM IST

டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்து ஐ.சி.சி. கனவு அணியை வெளியிட்டுள்ளது.

துபாய்,

கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்து கனவு அணியை வெளியிட்டுள்ளது. ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அந்த அணியில் 6 இந்திய வீரர்கள் இடம்பிடித்து ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

கனவு அணி விவரம் பின்வருமாறு:- ரோகித் (கேப்டன்), குர்பாஸ், நிக்கோலஸ் பூரன், சூர்யகுமார் யாதவ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ரஷீத் கான், பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் பரூக்கி.

12-வது வீரர்: நோர்ஜே.

மேலும் செய்திகள்