< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை: அனைத்தும் இந்தியாவுக்கு சாதகம்... இங்கிலாந்து நாளிதழின் விமர்சனத்திற்கு வாசிம் ஜாபர் பதிலடி
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: அனைத்தும் இந்தியாவுக்கு சாதகம்... இங்கிலாந்து நாளிதழின் விமர்சனத்திற்கு வாசிம் ஜாபர் பதிலடி

தினத்தந்தி
|
3 Jun 2024 10:29 AM GMT

இந்த டி20 உலகக்கோப்பை முழுவதுமாக இந்தியாவுக்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் பழமை வாய்ந்த விஸ்டன் நாளிதழ் விமர்சித்துள்ளது.

மும்பை,

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. மற்ற டி20 உலகக்கோப்பை தொடர்களை காட்டிலும் இந்த முறை பெரிய அளவில் நடத்தப்படுகிறது. ஏனெனில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த டி20 உலகக்கோப்பையில் தான் மொத்தம் 20 அணிகள் விளையாடுகின்றன. அத்துடன் அமெரிக்காவில் கிரிக்கெட் பிரபலமாக இல்லை. எனவே அங்கே கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதற்காக வரலாற்றிலேயே முதல் முறையாக ஐசிசி தொடர் அமெரிக்காவிலும் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த உலகக்கோப்பை முழுவதுமாக இந்தியாவுக்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் நூற்றாண்டு பழமை வாய்ந்த விஸ்டன் நாளிதழ் விமர்சித்துள்ளது. முதலாவதாக அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி ஒன்று இரவு 8 மணிக்கு அல்லது அதிகாலை 6 மணிக்கு துவங்கும் வகையில் ஐசிசி அட்டவணையை வடிவமைத்துள்ளதாக விஸ்டன் பத்திரிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்குவதால் வெஸ்ட் இண்டீஸ் உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு போட்டி தூங்குவதாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. அதன் காரணமாக அப்போட்டிகளில் பனியின் தாக்கம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதாக அந்த பத்திரிகை விமர்சித்துள்ளது. அதைத்தொடர்ந்து கயானாவில் நடைபெறும் அரையிறுதி போட்டிக்கு ரிசர்வ் டே கிடையாது என்று ஏற்கனவே ஐசிசி அறிவித்துள்ளது.

அத்துடன் ஒருவேளை இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றால் அந்த போட்டியில்தான் விளையாட வேண்டும் என்றும் ஏற்கனவே ஐசிசி அறிவித்துள்ளது. அதற்கான காரணம் என்னவெனில் அதிகாலை 6 மணிக்கு இந்தியா விளையாடினால் அதை இந்தியாவில் உள்ள ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள். அதனால் இரவு 8 மணிக்கு கயானாவில் நடைபெறும் அரையிறுதியில் இந்தியா விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தங்களுடைய அரையிறுதி ஆட்டம் நடக்கும் மைதானத்தை முன்கூட்டியே இந்தியா தெரிந்து கொண்டுள்ளதாக விஸ்டன் விமர்சித்துள்ளது.

அதைப் பார்த்த இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் அந்த பத்திரிக்கைக்கு தனது எக்ஸ் பக்கத்தில் கொடுத்த பதிலடி பின்வருமாறு:- "நீங்கள் எங்கே அரையிறுதியில் விளையாடப் போகிறீர்கள் என்று தெரிந்து கொள்வது ஒரு விஷயம். அதற்கு நீங்கள் தகுதி பெறுவீர்களா என்பது மற்றொரு விஷயம். எடுத்துக்காட்டாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி எப்போதுமே இங்கிலாந்தில் நடைபெறுகிறது. ஆனால் இங்கிலாந்து அணி அதற்கு எப்போதும் தகுதி பெற்றதில்லை" என்று நெத்தியடி பதிலை கொடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்