< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை: 3.1 ஓவர்களில் வெற்றி... ஓமனை ஊதித்தள்ளிய இங்கிலாந்து
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: 3.1 ஓவர்களில் வெற்றி... ஓமனை ஊதித்தள்ளிய இங்கிலாந்து

தினத்தந்தி
|
13 Jun 2024 9:29 PM GMT

இங்கிலாந்து அணி, 3.1 ஓவர்களில் இலக்கை கடந்து அபார வெற்றி பெற்றதுடன், அடுத்த சுற்று வாய்ப்பை நன்கு வலுப்படுத்தியுள்ளது.

ஆண்டிகுவா

டி20 உலகக்கோப்பை தொடரில் ஆண்டிகுவாவில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - ஓமன் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஓமன் அணி முதலில் பேட்டிங் செய்தது.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஓமன் அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து ஆட்டமிழந்தனர். ஒருவர் கூட நிலைத்து நின்று விளையாடவில்லை. அணியில் சோயேப் கான் மட்டுமே இரட்டை இலக்கத்தை தொட்டார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் நடையை கட்டினர்.

இறுதியில் அந்த அணி 13.2 ஓவர்களில் 47 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 4 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர், வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து 48 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அனைத்து பேட்ஸ்மேன்களுமே பவுண்டரியை மட்டுமே குறிக்கோளாக வைத்து விளையாடியதாக தெரிகிறது. இதன் விளைவாக இங்கிலாந்து அணி, 3.1 ஓவர்களில் இலக்கை கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன், அடுத்த சுற்று வாய்ப்பை மேலும் வலுவாக்கியுள்ளது.

மேலும் செய்திகள்