< Back
கிரிக்கெட்
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடர்; பட்லர் விக்கெட் கீப்பிங் செய்ய மாட்டார்...? - வெளியான தகவல்

கோப்புப்படம்

கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடர்; பட்லர் விக்கெட் கீப்பிங் செய்ய மாட்டார்...? - வெளியான தகவல்

தினத்தந்தி
|
5 Nov 2024 5:19 PM IST

பட்லருக்கு பதிலாக பில் சால்ட் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்வார் என கூறப்படுகிறது.

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரு ஒரு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

இந்நிலையில், ஒருநாள் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது போட்டி நாளை நடைபெறுகிறது. இதையடுத்து டி20 தொடர் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டி20 தொடருக்கு மட்டும் ஜாஸ் பட்லர் இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்தார். இதன் காரணமாக அவர் டி20 தொடரில் பங்கேற்க வெஸ்ட் இண்டீஸூக்கு சென்றுள்ளார்.

பொதுவாக கேப்டன் பொறுப்பு மட்டுமின்றி விக்கெட் கீப்பிங் பணியையும் மேற்கொள்ளும் பட்லர், வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டி20 தொடரில் விக்கெட் கீப்பிங் பணியை செய்ய மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக பில் சால்ட் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்வார் என கூறப்படுகிறது. காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள பட்லர் மீண்டும் காயம் அடைவதை தடுக்கும் பொருட்டு அவர் விக்கெட் கீப்பிங் பணியை செய்ய மாட்டார் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்