< Back
கிரிக்கெட்
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்; வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆல்ரவுண்டர் விலகல்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்; வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆல்ரவுண்டர் விலகல்

தினத்தந்தி
|
13 Nov 2024 2:58 PM IST

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.

பார்படாஸ்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய டி20 போட்டிகளில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரசல் விலகி உள்ளார். இடது கணுக்காலில் ஏற்பட்ட சுளுக்கு காரணமாக அவர் எஞ்சிய தொடரில் இருந்து விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஷமர் ஸ்பிரிங்கர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்