< Back
கிரிக்கெட்
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: தான் தேர்வு செய்த இந்திய அணியை அறிவித்த முன்னாள் வீரர்
கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: தான் தேர்வு செய்த இந்திய அணியை அறிவித்த முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
9 Jan 2025 5:30 PM IST

இந்தியா - இங்கிலாந்து முதல் டி20 போட்டி வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது.

மும்பை,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி வரும் 22-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்காக தான் தேர்வு செய்த இந்திய அணியை முன்னாள் வீரர் சஞ்சய் பங்கார் அறிவித்துள்ளார்.

இந்திய அணி விவரம் பின்வருமாறு:-

சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், வருண் சக்ரவர்த்தி, கலீல் அகமது.

மேலும் செய்திகள்