டி20 கிரிக்கெட்; இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு
|இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
டர்பன்,
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இந்திய அணியை பொறுத்தவரை கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப்சிங் போன்ற அனுபவ வீரர்கள் அணிக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள். எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், ரீசாஹென்ரிக்ஸ் ஆகியோர் அணிவகுத்து நிற்கின்றனர். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.