< Back
கிரிக்கெட்
டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக மாபெரும் வரலாற்று சாதனை படைத்த மார்கோ ஜான்சன்
கிரிக்கெட்

டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக மாபெரும் வரலாற்று சாதனை படைத்த மார்கோ ஜான்சன்

தினத்தந்தி
|
14 Nov 2024 3:22 PM IST

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியின்போது இவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

செஞ்சூரியன்,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது டி20 போட்டி நேற்று நிறைவடைந்தது. இதில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா நிர்ணயித்த 220 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தது. இருப்பினும் பின்வரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாடிய மார்கோ ஜான்சன் 17 பந்துகளில் 54 ரன்கள் அடித்து அணி வெற்றி பெற போராடினார். இருப்பினும் வெற்றி பெற முடியவில்லை. 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த ஆட்டத்தில் ஜான்சன் 16 பந்துகளில் அரைசதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் 19 பந்துகளில் அடித்ததே சாதனையாக இருந்தது.

அந்த பட்டியல்:-

1. மார்கோ ஜான்சன் - 16 பந்துகள்

2. கேமரூன் கிரீன் - 19 பந்துகள்

3. ஜான்சன் சார்லஸ்/ தசுன் ஷனகா - 20 பந்துகள்

மேலும் செய்திகள்