< Back
கிரிக்கெட்
டி20 கிரிக்கெட்; முதல் இந்திய வீரராக மாபெரும் சாதனை படைத்த ஹர்திக் பாண்ட்யா

Image Courtesy: AFP

கிரிக்கெட்

டி20 கிரிக்கெட்; முதல் இந்திய வீரராக மாபெரும் சாதனை படைத்த ஹர்திக் பாண்ட்யா

தினத்தந்தி
|
24 Nov 2024 10:52 AM IST

17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்தூர்,

17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் பரோடா - குஜராத் அணிகள் இந்தூரில் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 185 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பரோடா 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 188 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பரோடா தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 74 ரன்கள் எடுத்தார். ஐ.சி.சி தரவரிசையில் உலகின் நம்பர் 1 டி20 ஆல்ரவுண்டராக இருக்கும் பாண்ட்யா அபாரமாக ஆடி அணியை வெற்றி பெறச்செய்தார்.

இந்த 74 ரன்களையும் சேர்த்து டி20 கிரிக்கெட்டில் அவர் 5067 ரன்கள் எடுத்துள்ளார். அத்துடன் பந்து வீச்சில் அவர் 180 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 5000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை பாண்ட்யா படைத்துள்ளார். இதனால் அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்தப்பட்டியலில் ரவீந்திர ஜடேஜா 3684 ரன் மற்றும் 225 விக்கெட்டுகள் எடுத்து 2வது இடத்திலும், அக்சர் படேல் 2960 ரன் மற்றும் 227 விக்கெட்டுகள் எடுத்து 3வது இடத்திலும் உள்ளனர்.

மேலும் செய்திகள்