< Back
கிரிக்கெட்
டி20 கிரிக்கெட்; ஜிம்பாப்வேவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு

Image Courtesy: @ZimCricketv

கிரிக்கெட்

டி20 கிரிக்கெட்; ஜிம்பாப்வேவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு

தினத்தந்தி
|
11 Dec 2024 4:50 PM IST

ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது.

ஹராரே,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது.

ஜிம்பாப்வே அணிக்கு சிக்கந்தர் ராசா கேப்டனாகவும், ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஷித் கான் கேப்டனாகவும் செயல்பட உள்ளனர். இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.


மேலும் செய்திகள்