சையத் முஷ்டாக் அலி கோப்பை: குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி தோல்வி
|4 ஆட்டங்களில் விளையாடியுள்ள தமிழக அணி கண்ட 2-வது தோல்வி இதுவாகும்.
இந்தூர்,
17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி மும்பை, இந்தூர், ராஜ்கோட், ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் தமிழக அணி குஜராத்தை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 133 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஹெமங் படேல் அரைசதம் அடித்தார். தமிழகம் தரப்பில் சந்தீப் வாரியர், குர்ஜப்னீத் சிங் மற்றும் முகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 134 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழகம், குஜராத் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை தாரை வார்த்தது. வெறும் 18.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தமிழகம் 114 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் குஜராத் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தமிழகம் தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஷாருக்கான் 33 ரன்கள் அடித்தார். குஜராத் தரப்பில் அதிகபட்சமாக அர்சான் நாக்வாஸ்வல்லா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
4 ஆட்டங்களில் விளையாடியுள்ள தமிழக அணி கண்ட 2-வது தோல்வி இதுவாகும்.