< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
சையத் முஷ்டாக் அலி கோப்பை; தமிழக அணி அறிவிப்பு.. யாருக்கெல்லாம் இடம்..?
|12 Nov 2024 5:44 AM IST
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான (20 ஓவர்) சையத் முஷ்டாக் அலி கோப்பையின் 17-வது சீசன் வரும் 23-ம் தேதி ஆரம்பமாக உள்ளது. இந்த தொடரில் கலந்துகொண்டுள்ள 38 அணிகள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழக அணி 'குரூப் பி' -ல் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஷாருக்கான் கேப்டனாகவும், துணை கேப்டனாக சாய் சுதர்சனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அணி விவரம் பின்வருமாறு:-
ஷாருக்கான் (கேப்டன்), சாய் சுதர்சன், விச்ஜய் சங்கர், பிரதோஷ் ரஞ்சன் பால், வைஷ்ன குமார், முகமது அலி, சித்தார்த், ஜெகதீசன், பாபா இந்திரஜித், ஈஸ்வரன், சாய் கிஷோர், சித்தார்த் எம், சந்தீப் வாரியர், வருண் சக்ரவர்த்தி, குர்ஜப்னீத் சிங், சோனு யாதவ் மற்றும் முகமது எம்.