சையத் முஷ்டாக் அலி கோப்பை; திரிபுராவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கிய தமிழகம்
|தமிழகம் தரப்பில் குர்ஜப்நீத் சிங், வருண் சக்கரவர்த்தி, சாய் கிஷோர், விஜய் சங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்தூர்,
17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் தமிழக அணி திரிபுராவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தமிழகம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தமிழகம் 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 234 ரன்கள் குவித்தது. தமிழகம் தரப்பில் அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 78 ரன், ஜெகதீசன் 50 ரன் எடுத்தனர். தொடர்ந்து 235 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய திரிபுரா 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 43 ரன் வித்தியாசத்தில் திரிபுராவை வீழ்த்தி தமிழகம் தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. திரிபுரா தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரீதம் பவுல் 45 ரன் எடுத்தார். தமிழகம் தரப்பில் குர்ஜப்நீத் சிங், வருண் சக்கரவர்த்தி, சாய் கிஷோர், விஜய் சங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.