< Back
கிரிக்கெட்
சையத் முஷ்டாக் அலி கோப்பை; ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி அறிவிப்பு

Image Tweeted By BCCIdomestic

கிரிக்கெட்

சையத் முஷ்டாக் அலி கோப்பை; ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
18 Nov 2024 1:09 PM IST

சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான (20 ஓவர்) சையத் முஷ்டாக் அலி கோப்பையின் 17-வது சீசன் வரும் 23-ம் தேதி ஆரம்பமாக உள்ளது. இந்த தொடரில் கலந்துகொண்டுள்ள 38 அணிகள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழக அணி 'குரூப் பி' -ல் இடம்பெற்றுள்ளது.

இந்த தொடருக்கான தமிழக அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. தமிழக அணிக்கு ஷாருக்கான் கேப்டனாகவும், துணை கேப்டனாக சாய் சுதர்சனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தொடருக்கான மும்பை அணி குரூப் - இ யில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த தொடருக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் அஜிங்க்ய ரகானே, பிரித்வி ஷா, ஷர்துல் தாகூர், சித்தேஷ் லாட் போன்ற முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

மும்பை அணி விவரம்; ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பிரித்வி ஷா, ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ஜெய் பிஸ்டா, அஜிங்க்ய ரகானே, சித்தேஷ் லாட், சூர்யன்ஷ் ஷெட்ஜ், சாய்ராஜ் பாட்டீல், ஹர்திக் தாமோர் (விக்கெட் கீப்பர்), ஆகாஷ் ஆனந்த் (விக்கெட் கீப்பர்), ஷம்ஸ் முலானி, ஹிமான்சு சிங், தனுஷ் கோட்யான், ஷர்துல் தாக்கூர், மொஹித் அவஸ்தி, ராய்ஸ்டன் டயஸ், ஜூன்ட் கான்


மேலும் செய்திகள்