சிட்னி டெஸ்ட் : ரோகித் சர்மா விலகல்
|இந்திய அணி கேப்டனாக பும்ரா செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னி,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்டில் இந்தியாவும், 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. 3-வது டெஸ்ட் மழையால் 'டிரா' ஆனது. மெல்போர்னில் நடந்த 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது.
இந்த நிலையில், இந்த டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விலகியுள்ளார். இதனால் இந்திய அணி கேப்டனாக பும்ரா செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது . முன்னதாக இந்த தொடரில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது .