< Back
கிரிக்கெட்
சிட்னி டெஸ்ட் தோல்வி: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா
கிரிக்கெட்

சிட்னி டெஸ்ட் தோல்வி: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா

தினத்தந்தி
|
5 Jan 2025 9:26 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது.

சிட்னி,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான சூழலில் இந்தியா களமிறங்கியது.

இருப்பினும் இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பிலிருந்து இந்தியா வெளியேறியுள்ளது.

அத்துடன் இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2-வது முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. தென் ஆப்பிரிக்கா முதல் அணியாக ஏற்கனவே தகுதி பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்