< Back
கிரிக்கெட்
சிட்னி டெஸ்ட்: மருத்துவமனை சென்ற பும்ரா.. களத்தில் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி
கிரிக்கெட்

சிட்னி டெஸ்ட்: மருத்துவமனை சென்ற பும்ரா.. களத்தில் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி

தினத்தந்தி
|
4 Jan 2025 10:02 AM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது.

சிட்னி,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பண்ட் 40 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்காட் போலன்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, இந்திய பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக வெப்ஸ்டர் 57 ரன்கள் அடித்தார். தரப்பில் சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகளும், பும்ரா, நிதிஷ் ரெட்டி தலா விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர். பின்னர் 4 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.

முன்னதாக இந்த போட்டியிலிருந்து மோசமான பார்ம் காரணமாக ரோகித் சர்மா விலகிய நிலையில் கேப்டன் பொறுப்பு பும்ராவிற்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் 2-வது நாள் ஆட்டத்தின் பாதியில் பும்ரா காயம் காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதன் காரணமாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி பும்ரா இல்லாத சூழலில் அணியை கேப்டனாக வழிநடத்தினார்.

விராட் கோலி இந்திய அணியின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக போற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்