சூப்பர் 8 சுற்று: வெஸ்ட் இண்டீஸ் அபார பந்துவீச்சு...129 ரன்களை இலக்காக நிர்ணயித்த அமெரிக்கா
|வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரசல், ரோஸ்டன் சேஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
ஆன்டிகுவா,
9-வது டி20உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது சூப்பர்8 சுற்று ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பவல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, அமெரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் ஸ்டீவன் டெய்லர் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆண்ட்ரிஸ் கௌஸ், நிதீஷ் குமார் இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். பொறுப்புடன் ஆடிய ஆண்ட்ரிஸ் கௌஸ் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.தொடர்ந்து நிதீஷ் குமார் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த அமெரிக்கா பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 19.5 ஓவர்களில் 128 ரன்களுக்கு அமெரிக்கா அணி ஆட்டமிழந்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரசல், ரோஸ்டன் சேஸ் தலா 3 விக்கெட், வீழ்த்தினர்.