ஐ.பி.எல். இறுதிப்போட்டி: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஐதராபாத்
|ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் ஐதராபாத் - கொல்கத்தா மோதி வருகின்றன.
சென்னை,
17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்றுவரும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் மோதி வருகின்றன.
இறுதிப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரில் ஸ்டார்க் பந்து வீச்சில் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அபிஷேக் சர்மா போல்ட் முறையில் அவுட் ஆனார். அடுத்த ஓவரை வைபவ் அரோரா வீசிய நிலையில் மற்றொரு தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் அவர் சந்தித்த முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல்(0 ரன்கள்) கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்துவந்த ராகுல் திரிபாதி 13 பந்தில் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்து வீச்சில் அவுட் ஆனார். மற்றொரு வீரரான நிதிஷ் ராணா 13 ரன்னில் அவுட் ஆனார். சற்று நிலைத்து நின்று ஆடிய மார்க்ரம் 23 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். ஷபாஸ் அகமது 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தற்போதைய நிலவரப்படி, ஐதராபாத் 11.5 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. கிளாசன் 11 ரன்களுடன் களத்தில் உள்ளார்.