< Back
கிரிக்கெட்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ரன்...புஜாராவை முந்திய சுப்மன் கில்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ரன்...புஜாராவை முந்திய சுப்மன் கில்

தினத்தந்தி
|
2 Nov 2024 6:34 PM IST

இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

மும்பை,

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டேரில் மிச்செல் 82 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 86 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கில் 31 ரன்னுடனும், பண்ட் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 59.4 ஓவர்களில் 263 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 90 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 43.3 ஓவர்களில் 171 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது

நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 7 ரன்னுடன் களத்தில் உள்ளார். நியூசிலாந்து இதுவரை 143 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்தியா தரப்பில் ஜடேஜா 4விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் சுப்மன் கில் 90 ரன்கள் அடித்ததன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புஜாராவின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.

அதாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக ரன் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் புஜாராவை (1769 ரன்) பின்னுக்கு தள்ளி சுப்மன் கில் (1799 ரன்) 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக ரன் அடித்த இந்திய வீரர்கள்;

ரோகித் சர்மா - 2674 ரன்

விராட் கோலி - 2426 ரன்

ரிஷப் பண்ட் - 1933 ரன்

சுப்மன் கில் - 1799 ரன்

செத்தேஷ்வர் புஜாரா - 1769 ரன்

மேலும் செய்திகள்