< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன இலங்கை முன்னாள் கேப்டன்... புகைப்படம் வைரல்
|19 July 2024 3:50 PM IST
ரணதுங்கா உடல்எடை குறைந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார்.
கொழும்பு,
இலங்கை கிரிக்கெட் அணி 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற போது (50 ஓவர்) அந்த அணியின் கேப்டனாக இருந்தவர், அர்ஜூனா ரணதுங்கா. உடல் பருமனாக இருந்தாலும் அவரது பேட்டிங்கும், கேப்டன்ஷிப்பும் அந்த சமயத்தில் வெகுவாக கவர்ந்தது. கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகு அரசியலில் குதித்தார். எம்.பி.யாகி மந்திரியாகவும் பதவி வகித்தார். கிரிக்கெட் நிர்வாகத்திலும் பல பணிகளை கவனித்தார்.
இந்த நிலையில் 60 வயதான ரணதுங்கா உடல்எடை குறைந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார். இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவுடன் அவர் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது. ரணதுங்காவா இது, நம்பவே முடியவில்லை என்று ரசிகர்கள் பலரும் ஆச்சரியமுடன் பதிவிட்டு வருகின்றனர்.