நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு
|நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு,
இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் (50 ஓவர்) தொடர்களில் விளையாட உள்ளது. இந்த தொடரில் முதலில் டி20 தொடரும் அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளன.
அதன்படி டி20 தொடர் வரும் 28-ம் தேதி தொடங்க உள்ளது. ஒருநாள் போட்டிகள் ஜனவரி 5, 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இந்த தொடர்களுக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் இந்த தொடரின் ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலன்கா தலைமையிலான அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்கா நீண்ட நாட்கள் கழித்து இடம்பெற்றுள்ளார்.
இலங்கை அணி விவரம் பின்வருமாறு:- சரித் அசலன்கா (கேப்டன்), பதும் நிசங்கா, அவிஷ்கா பெர்னண்டோ, நிஷான் மதுஷ்கா, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, நுவனிது பெர்னாண்டோ, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, ஜெப்ரி வான்டர்சே, சமிது விக்ரமசிங்கே, அசிதா பெர்னண்டோ, முகமது சிராஸ், லஹிரு குமரா மற்றும் எஷன் மலிங்கா.