< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் விலகல்
|25 July 2024 6:49 AM IST
இலங்கை - இந்தியா முதலாவது டி20 போட்டி வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது.
கொழும்பு
இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 27-ம் தேதி பல்லகெலேவில் நடக்கிறது.
இதில் டி20 தொடருக்கான இலங்கை அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இன்னும் ஒரு நாளில் முதலாவது டி20 போட்டி நடைபெற உள்ள நிலையில், இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான சமீரா காயம் காரணமாக டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.