< Back
கிரிக்கெட்
ஸ்ரீசாந்த் தேர்ந்தெடுத்த ஆல் டைம் குட் பாய்ஸ் அணி.. கம்பீர் - கோலி தொடக்க ஆட்டக்காரர்கள்

image courtesy: AFP

கிரிக்கெட்

ஸ்ரீசாந்த் தேர்ந்தெடுத்த ஆல் டைம் குட் பாய்ஸ் அணி.. கம்பீர் - கோலி தொடக்க ஆட்டக்காரர்கள்

தினத்தந்தி
|
13 Sept 2024 2:26 PM IST

ஸ்ரீசாந்த் ஒரு புதுமையான கனவு அணியை தேர்ந்தெடுத்துள்ளார்.

மும்பை,

வரலாற்றில் சிறந்து விளங்கிய வீரர்களைக் கொண்டு கனவு 11 பேர் கொண்ட அணியை முன்னாள் இந்நாள் வீரர்கள் தேர்ந்தெடுப்பது வழக்கமாகும். ஆனால் தற்போது இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் ஒரு புதுமையான கனவு அணியை தேர்ந்தெடுத்துள்ளார். அதாவது திறமை மட்டுமின்றி களத்தில் எதிரணியினருடன் சண்டை போட்டு ஆக்ரோஷமாக நடந்து கொண்ட சிறந்த 11 வீரர்களைக் கொண்ட அணியை அவர் தேர்வு செய்துள்ளார்.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக இந்தியாவின் கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலி ஆகியோரை ஸ்ரீசாந்த் தேர்ந்தெடுத்து இருக்கிறார். இந்த இருவரையும் ஓப்பனிங்கில் தேர்ந்தெடுத்துள்ள ஸ்ரீசாந்த் 3வது இடத்தில் ரிக்கி பாண்டிங் 4வது இடத்தில் சவுரவ் கங்குலி ஆகியோரையும், ஆல் ரவுண்டர்களாக வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன், பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடி மற்றும் வெஸ்ட் இண்டீசின் பொல்லார்டு ஆகியோரை அணியில் சேர்த்துள்ளார்.

சுழற்பந்து வீச்சாளராக ஹர்பஜன் சிங்கையும், அதன் பின் சோயப் அக்தர் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஆண்ட்ரூ நெல் ஆகியோரையும் வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்ந்தெடுத்துள்ளார். இறுதியில் தம்மையே 11வது வீரராக தேர்வு செய்துள்ளார்.

மொத்தத்தில் ஆல் டைம் குட் பாய்ஸ் கிரிக்கெட் அணி என்ற பெயரில் ஸ்ரீசாந்த் ஜாலியாக தேர்ந்தெடுத்துள்ள வித்தியாசமான அணி: கவுதம் கம்பீர், விராட் கோலி, ரிக்கி பாண்டிங், சவுரவ் கங்குலி (கேப்டன்), சாகித் அப்ரிடி, ஷகிப் அல் ஹசன், கைரன் பொல்லார்ட், ஹர்பஜன் சிங், சோயப் அக்தர், ஆண்ட்ரூ நெல், ஸ்ரீசாந்த்.

மேலும் செய்திகள்