< Back
கிரிக்கெட்
நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடர்; இந்திய அணியில் இணைந்த சுழற்பந்து வீச்சாளர்

Image Courtesy: @ICC

கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடர்; இந்திய அணியில் இணைந்த சுழற்பந்து வீச்சாளர்

தினத்தந்தி
|
20 Oct 2024 6:56 PM IST

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்டடெஸ்ட், தொடரில் ஆடி வருகிறது.

பெங்களூரு,

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்டடெஸ்ட், தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் நியூசிலாந்துக்காக சிறப்பாக பேட்டிங் செய்த ரச்சின் ரவீந்திராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. 2வது டெஸ்ட் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் அப்படியே இடம் பெற்றுள்ளனர். மேலும், இந்த அணியில் தமிழக ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரும் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ரஞ்சி டிராபில் சிறப்பாக செயல்பாட்டை வெளிப்படுத்தியதன் காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணி விவரம்; ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்ப்ரீத் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்ம் ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர்.





மேலும் செய்திகள்