இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு
|இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கெபேஹாவில் இன்று நடக்கிறது.
கெபேஹா,
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டர்பனில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கெபேஹாவில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:
இந்தியா: சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், வருண் சக்ரவர்த்தி.
தென்ஆப்பிரிக்கா: ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரியான் ரிக்கெல்டன், மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சென், அன்டில் சிம்லேன், ஜெரால்டு கோட்ஜீ, கேஷவ் மகராஜ், நபயோம்ஜி பீட்டர்