< Back
கிரிக்கெட்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: ஆடும் வீரர்களை அறிவித்த தென் ஆப்பிரிக்கா

image courtesy: AFP

கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: ஆடும் வீரர்களை அறிவித்த தென் ஆப்பிரிக்கா

தினத்தந்தி
|
26 Nov 2024 6:37 PM IST

தென் ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது.

டர்பன்,

இலங்கை கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இது இரு அணிகளுக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தங்களது நிலையை வலுப்படுத்த உதவும் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை டர்பன் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த முதல் போட்டிக்கான ஆடும் வீரர்களை (பிளெயிங் 11) கொண்ட அணியை தென் ஆப்பிரிக்கா அறிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி விவரம் பின்வருமாறு:- டெம்பா பவுமா (கேப்டன்), எய்டன் மார்க்ரம், டோனி டி சார்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்காம், கைல் வெர்ரியனே, வியான் முல்டர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்சி, கேஷவ் மகராஜ் மற்றும் ரபடா.

மேலும் செய்திகள்