< Back
கிரிக்கெட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது போட்டியில் களமிறங்கும் ஷமி - அவரது பயிற்சியாளர் தகவல்

image courtesy: AFP

கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது போட்டியில் களமிறங்கும் ஷமி - அவரது பயிற்சியாளர் தகவல்

தினத்தந்தி
|
15 Nov 2024 6:23 PM IST

காயத்திலிருந்து மீண்டு வந்த முகமது ஷமி தற்போது ரஞ்சி கோப்பையில் விளையாடி வருகிறார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது ஏற்பட்ட காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் அவரால் இடம் பெற முடியவில்லை.

தற்போது கணுக்கால் காயத்தில் இருந்து மீண்டுள்ள முகமது ஷமி ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். காயத்திலிருந்து கம்பேக் கொடுத்த முதல் போட்டியிலேயே பெங்கால் அணிக்காக விளையாடிய அவர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதனால் அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பெறுவார் என்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் முகமது ஷமியின் சிறு வயது பயிற்சியாளரான முகமது பத்ருதீன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3வது போட்டியில் இந்தியாவுக்காக ஷமி விளையாடுவார் என்று தகவல் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "அடிலெய்டு நகரில் நடைபெறும் 2-வது போட்டிக்கு பின் ஷமி இந்திய அணியுடன் இணைவார். தற்போது மீண்டும் வந்துள்ள அவர் அது பிட்னசை நிரூபித்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார். எனவே அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் தொடரின் பிற்பகுதியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிப்பார்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்