டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷகிப் அல் ஹசன் அறிவிப்பு
|வங்காளதேச அணியின் ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கான்பூர்,
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த தொடரில் வங்காளதேச அணியின் ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் வங்காளதேசத்தில் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருடன் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுவரை 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷகிப் அல் ஹசன் 4,600 ரன்களும், 242 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்