< Back
கிரிக்கெட்
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடர்; முஸ்தாபிசுர் ரஹ்மான் பங்கேற்பது சந்தேகம்..?

Image Courtesy: @BCBtigers

கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடர்; முஸ்தாபிசுர் ரஹ்மான் பங்கேற்பது சந்தேகம்..?

தினத்தந்தி
|
10 Nov 2024 6:45 PM IST

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் முஸ்தாபிசுர் ரஹ்மான் கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

டாக்கா,

வங்காளதேச கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் வங்காளதேச அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது.

இந்த தொடருக்கான வங்காளதேச அணிகள் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் (டெஸ்ட் + ஒருநாள் + டி20) இருந்து வங்காளதேச முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முஸ்தாபிசுர் ரஹ்மான் கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த மாதத்தில் அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அவர் மனைவியுடன் இருக்க வேண்டி உள்ளதால் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் கலந்து கொள்ள மாட்டார் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்