< Back
கிரிக்கெட்
ஆஸ்திரேலிய அணிக்கு சச்சின் பாராட்டு
கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணிக்கு சச்சின் பாராட்டு

தினத்தந்தி
|
5 Jan 2025 1:55 PM IST

ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி, அதன்பின் மீண்டு வந்து தொடரை 3-1 என்ற கணக்கில் (ஒரு போட்டி டிரா) கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும் சொந்த மண்ணில் கடந்த 2 பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்களில் கண்ட தோல்விக்கு தற்போது கம்மின்ஸ் தலைமையில் பதிலடி கொடுத்துள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 0-1 என்ற கணக்கில் பின்தங்கி தொடரை 3-1 என கைப்பற்றியது பாராட்டுக்குரிய செயல்பாடு. பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றதற்காக ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள்.என தெரிவித்துள்ளார் .

மேலும் செய்திகள்