< Back
கிரிக்கெட்
எஸ்.ஏ.20 ஓவர் லீக்: தூதராக அல்ல... வீரராக களமிறங்கும் தினேஷ் கார்த்திக்
கிரிக்கெட்

எஸ்.ஏ.20 ஓவர் லீக்: தூதராக அல்ல... வீரராக களமிறங்கும் தினேஷ் கார்த்திக்

தினத்தந்தி
|
6 Aug 2024 12:36 PM IST

தினேஷ் கார்த்திக் எஸ்.ஏ.20 ஓவர் லீக் தொடரின் தூதராக நியமிக்கப்பட்டதாக நேற்று செய்திகள் வெளியாகின.

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இந்த 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

இந்த தொடரில் இதுவரை இரண்டு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அந்த இரு சீசன்களிலும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த தொடரின் 3வது சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி தொடங்கி பிப்ரவரி 8ம் தேதி வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த தொடரின் தூதராக இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டதாக நேற்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் எஸ்.ஏ.20 ஓவர் லீக் தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட தினேஷ் கார்த்திக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் எஸ்.ஏ. 20 ஓவர் லீக் தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற உள்ளார்.

மேலும் செய்திகள்