< Back
கிரிக்கெட்
எஸ்.ஏ.20 ஓவர் லீக்: பிரிட்டோரியா கேபிடல்ஸை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டர்பன் அணி

Image Courtesy: @SA20_League / @DurbansSG

கிரிக்கெட்

எஸ்.ஏ.20 ஓவர் லீக்: பிரிட்டோரியா கேபிடல்ஸை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டர்பன் அணி

தினத்தந்தி
|
11 Jan 2025 7:23 AM IST

பிரிட்டோரியா கேபிடல்ஸை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி டர்பன் அணி திரில் வெற்றி பெற்றது.

டர்பன்,

ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இதன் 3வது சீசன் கடந்த 9ம் தேதி தொடங்கியது. இதையடுத்து இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டுமே இழந்து 209 ரன்கள் குவித்தது. டர்பன் அணி தரப்பில் அதிரடியாக ஆடிய வில்லியம்சன் 40 பந்தில் 60 ரன்னும், முல்டர் 19 பந்தில் 45 ரன்னும் எடுத்தனர். பிரிட்டோரியா கேபிடல்ஸ் தரப்பில் சீனுரான் முத்துசாமி 3 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 210 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 2 ரன் வித்தியாசத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் திரில் வெற்றி பெற்றது.

பிரிட்டோரியா கேபிடல்ஸ் தரப்பில் குர்பாஸ் 89 ரன், வில் ஜேக்ஸ் 64 ரன் எடுத்தும் வெற்றி பெற இயலவில்லை. டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் தரப்பில் கிறிஸ் வோக்ஸ், நூர் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

மேலும் செய்திகள்