< Back
கிரிக்கெட்
எஸ்.ஏ. 20 ஓவர் லீக்: போட்ஜீட்டர் அபார பந்துவீச்சு... சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்திய எம்.ஐ.கேப்டவுன்

Image Courtesy: @SA20_League / @SunrisersEC / @MICapeTown

கிரிக்கெட்

எஸ்.ஏ. 20 ஓவர் லீக்: போட்ஜீட்டர் அபார பந்துவீச்சு... சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்திய எம்.ஐ.கேப்டவுன்

தினத்தந்தி
|
10 Jan 2025 8:49 AM IST

எம்.ஐ. கேப்டவுன் தரப்பில் அபாரமாக பந்துவீசிய டெலானோ போட்ஜீட்டர் 5 விக்கெட் வீழ்த்தினர்.

கெபெர்ஹா,

ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இந்த 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

இந்த தொடரில் இதுவரை இரண்டு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அந்த இரு சீசன்களிலும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த தொடரின் 3வது சீசன் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் எம்.ஐ.கேப்டவுன் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த எம்.ஐ.கேப்டவுன் 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் குவித்தது. கேப்டவுன் தரப்பில் டெவால்டு பிரெவிஸ் 29 பந்தில் 57 ரன்கள் எடுத்தார். சன்ரைசர்ஸ் தரப்பில் மார்கோ ஜான்சென், ரிச்சர்ட் க்ளீசென் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து 175 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணி கேப்டவுன் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 15 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 77 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. சன்ரைசர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 19 ரன் எடுத்தார். எம்.ஐ. கேப்டவுன் தரப்பில் அபாரமாக பந்துவீசிய டெலானோ போட்ஜீட்டர் 5 விக்கெட் வீழ்த்தினர்.

மேலும் செய்திகள்