சிட்னி டெஸ்ட்டில் ரோகித் சர்மா இடம்பெறாதது ஏன்? - கேப்டன் பும்ரா விளக்கம்
|சிட்னி டெஸ்ட்டில் இந்திய அணியில் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. இது குறித்து கேப்டன் பும்ரா விளக்கம் அளித்துள்ளார்.
சிட்னி,
ஆஸ்திரேலியா, இந்தியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற புள்ளி கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான 5வது டெஸ்ட் சிட்னியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி உணவு இடைவேளை வரை 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்துள்ளது.
இதனிடையே, 5வது டெஸ்ட்டில் இந்திய அணியில் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. கேப்டன் பொறுப்பு ஜஸ்பிரித் பும்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிட்னி டெஸ்ட்டில் ரோகித் சர்மா இடம்பெறாதது ஏன்? என்பது குறித்து கேப்டன் பும்ரா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், எங்கள் கேப்டன் தலைமை பண்மை காட்டியுள்ளார். அவர் இப்போட்டியில் ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளார்' என்றார்.