< Back
கிரிக்கெட்
சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா?
கிரிக்கெட்

சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா?

தினத்தந்தி
|
1 Jan 2025 3:07 PM IST

ரோகித் சர்மாவுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 டெஸ்டில் விளையாடி வெறும் 31 ரன் மட்டுமே எடுத்து தடுமாறி வரும் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் ரோகித் சர்மா கடினமான மனநிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சிட்னியில் நாளை மறுதினம் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் முடிந்ததும், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக அவர் இந்திய கிரிக்கெட் வாரிய முன்னணி நிர்வாகிகள் மற்றும் தேர்வு கமிட்டியிடம் ஏற்கனவே பேசியுள்ளதாக தெரிகிறது. .

மேலும் செய்திகள்