< Back
கிரிக்கெட்
ரோகித் சர்மா 3வது இடத்தில் களம் இறங்க வேண்டும் - இந்திய முன்னாள் பயிற்சியாளர்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

ரோகித் சர்மா 3வது இடத்தில் களம் இறங்க வேண்டும் - இந்திய முன்னாள் பயிற்சியாளர்

தினத்தந்தி
|
22 Dec 2024 8:04 AM IST

ரோகித் சர்மா 3வது இடத்தில் களம் இறங்க வேண்டும் என இந்திய முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் 3 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது.

இரு அணிகளுக்கும் இடையிலான 4வது போட்டி வரும் 26ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கில் தடுமாறி வருகிறார். இதனால் இந்திய ரசிகர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், ரோகித் சர்மா மீண்டும் பார்முக்கு திரும்ப பேட்டிங் டெக்னிக்கல் சில மாற்றங்களை செய்து 3வது இடத்தில் களமிறங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

எந்த பேட்ஸ்மேன்களுக்கும் இதுவே மந்திரமாக இருக்கும். ரோகித் சர்மா 2 விஷயங்களை செய்ய வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஒன்று அவர் 3வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும். ஏனெனில் நம்முடைய பவுலிங்கை பலப்படுத்த வேண்டியுள்ள நாம் கொஞ்சம் கூர்மையும் செய்ய வேண்டியுள்ளது. எனவே ரோகித் கண்டிப்பாக இந்த மாற்றத்தை செய்வார்.

அதைத் தவிர்த்து உங்களுக்கு நீங்களே கொஞ்சம் முன்னதாக தயாராக வேண்டும். குறிப்பாக அவருக்கு மிகவும் பிடித்த புல் சாட்டை அடிக்க அவருடைய பேட் நன்றாக முன்னோக்கிச் செல்லவில்லை. பொதுவாக அவர் அந்த ஷாட்டை தவற விட மாட்டார். இது மட்டுமின்றி ரோகித் சர்மா பேட்டிங் செய்யும் போது சற்று முன்னதாகவே நிலைபெற்றால் அவர் தனது கால்களை முன்னோக்கி எடுத்துச் செல்ல கொஞ்சம் எக்ஸ்ட்ரா நேரம் கிடைக்கும்.

அதைப் பயன்படுத்தி அவர் நல்ல ஷாட்டுகளை ஆடலாம். ஆஸ்திரேலியர்கள் அவருக்கு ஷார்ட் பந்துகளை வீசினார்கள். ஆனால் அதை ரோஹித் பலமுறை தவற விட்டார். அந்த தடுமாற்றத்தை தவிர்த்து தம்முடைய பார்முக்கு திரும்ப ரோகித் சர்மாவுக்கு 2 - 3 ஷாட்டுகள் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்