< Back
கிரிக்கெட்
ரோகித் சர்மா சிறந்த கேப்டன் - ஷிகர் தவான் ஆதரவு

image courtesy: PTI

கிரிக்கெட்

ரோகித் சர்மா சிறந்த கேப்டன் - ஷிகர் தவான் ஆதரவு

தினத்தந்தி
|
29 Oct 2024 3:59 PM IST

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்துள்ளதால் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மும்பை,

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்தியா அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் 12 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா இழந்துள்ளது.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத ரோகித் சர்மா கேப்டனாகவும் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணம் என்று பலரும் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஒரு மோசமான தோல்வியால் ரோகித் சர்மாவை விமர்சிப்பவர்கள் அவர் இந்திய அணியில் ஏற்படுத்தியுள்ள நல்ல மாற்றங்களையும் பார்க்க வேண்டும் என்று ஷிகர் தவான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "நீங்கள் பேசும் விஷயங்களை நாங்கள் உணர்வதில்லை. கிரிக்கெட்டில் எப்போதும் ஒரு வித அழுத்தம் இருக்கும். ஆனால் நாங்கள் அதில் சந்திக்கும் வெற்றி தோல்விகளுக்காக அழுத்தத்தில் வசிப்பதில்லை. ஏனெனில் விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது ஒரு அங்கம். கிரிக்கெட்டர்களாக நாங்கள் அதிகமாக சிந்திப்பதில்லை.

ரோகித் சர்மா சிறந்த கேப்டன். இது வெற்றி தோல்வியை சந்திப்பதை மட்டும் பொருத்ததல்ல. அணிக்குள் ஒரு ஆழமான தொடர்பு இருக்கும். அதனால் அணியில் இருக்கும் வீரர்கள் தங்களுடைய கேப்டனுடன் எந்தளவுக்கு தொடர்பு வைத்துள்ளார்கள், அவர்கள் கேப்டனை எப்படி பார்க்கிறார்கள் என்பது முக்கியம்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்