கிரிக்கெட்
ரோகித் தனது பேட்டிங் டெக்னிக் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் - தினேஷ் கார்த்திக்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

ரோகித் தனது பேட்டிங் டெக்னிக் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் - தினேஷ் கார்த்திக்

தினத்தந்தி
|
5 Nov 2024 5:54 PM IST

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது.

ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்தியா இதில் 4 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முன்னதாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படாத கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் பேட்டிங் பார்ம் குறித்த விமர்சனம் அனைவரிடத்திலும் இருந்து வருகிறது.

இந்நிலையில், ரோகித் சர்மா தனது பேட்டிங் டெக்னிக் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ரோகித் சர்மாவின் பேட்டிங் தடுமாற்றம் குறித்து பேசி உள்ள தினேஷ் கார்த்திக் கூறியதாவது, ரோகித் சர்மா தொடக்க வீரராக தனது பொறுப்பை ஏற்றுக் கொண்ட காலத்தில் இருந்து மிகச் சிறப்பாக விளையாடி வந்தார். ஆனால் தற்போது அவருடைய பேட்டிங் டெக்னிக் மீது அவர் நம்பிக்கை வைக்க வேண்டும்.

ஆனால் ரோகித் சர்மா அதை செய்யாமல் அதிரடியாக விளையாட வேண்டும் என்பது மட்டும்தான் ஆப்ஷன் என்பது போன்று விளையாடிக் கொண்டிருக்கிறார். அவரது பேட்டிங் மீது நம்பிக்கை வைத்தால் நிச்சயம் அவரால் மீண்டும் சிறப்பாக விளையாட முடியும்.

மெதுவாக விளையாடினாலோ அல்லது மென்மையான ஒரு ஷாட் ஆடினாலோ ஆட்டமிழந்து விடுவோம் என்று நினைப்பதால் தான் அவர் அதிரடியாக விளையாடி வருகிறார். இதன் காரணமாக எல்லா பந்தையும் அடிக்கச் சென்றால் நிச்சயம் அதில் ஆபத்து அதிகம். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை பேட்டிங் டெக்னிக்கை நம்பி விளையாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்