< Back
கிரிக்கெட்
அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதை மறைக்கும் அளவிற்கு ரோகித் சிறந்த பேட்ஸ்மேன் கிடையாது - மஞ்ரேக்கர்
கிரிக்கெட்

அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதை மறைக்கும் அளவிற்கு ரோகித் சிறந்த பேட்ஸ்மேன் கிடையாது - மஞ்ரேக்கர்

தினத்தந்தி
|
3 Jan 2025 10:01 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டிலிருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார்.

மும்பை,

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இதில் மோசமான பார்ம் காரணமாக ரோகித் விலகிய நிலையில், பும்ரா கேப்டனாக செயல்படுகிறார். மேலும் டாசின்போது, ரோகித் தாமாக முன்வந்து இந்த போட்டியிலிருந்து ஓய்வு எடுப்பதாக தங்களிடம் கூறினார் என்று பொறுப்பு கேப்டன் பும்ரா தெரிவித்தார்.

இந்நிலையில் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதை மறைக்கும் அளவிற்கு ரோகித் சிறந்த பேட்ஸ்மேன் கிடையாது என்று இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஏன் ஏதோ ரகசிய ஆபரேஷனை போல் மறைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இதுதான் இந்திய கிரிக்கெட் கலாச்சாரத்தில் எனக்கு பிடிக்காத விஷயம். அணியிலிருந்து நீக்கப்பட்டதை மறைக்கும் அளவிற்கு ரோகித் சர்மா ஒன்றும் சிறந்த பேட்ஸ்மேன் அல்ல. ஒருவேளை விராட் கோலிக்கு இப்படி செய்திருந்தால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்.

ஆனால் ரோகித் சர்மா சுமார் 60 டெஸ்ட் போட்டிகள் விளையாடி சேனா (தென் ஆப்பிரிக்க, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) நாடுகளில் ஒரேயொரு சதத்தை மட்டுமே விளாசி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ரோகித் சர்மாவின் பேட்டிங் சராசரி வெறும் 40 மட்டும்தான். இதனால் ரோகித் சர்மா நீக்கப்பட்டதை இந்திய அணி மறைக்க தேவையில்லை என்பதே எனது கருத்து" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்