< Back
கிரிக்கெட்
ரிஷப் நீங்கள் எப்போதும் எனது தம்பிதான் - டெல்லி அணியின் உரிமையாளர் உணர்ச்சிப்பூர்வ பதிவு

image courtesy: AFP

கிரிக்கெட்

ரிஷப் நீங்கள் எப்போதும் எனது தம்பிதான் - டெல்லி அணியின் உரிமையாளர் உணர்ச்சிப்பூர்வ பதிவு

தினத்தந்தி
|
26 Nov 2024 8:48 PM IST

டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான ரிஷப் பண்டை லக்னோ ஏலத்தில் எடுத்துள்ளது.

புதுடெல்லி,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு ஆகியவை ஏற்கனவே முடிந்து விட்டன. 10 அணிகளும் மொத்தம் 46 வீரர்களை தக்க வைத்தன.

ஐ.பி.எல். வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.

இதில் டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான ரிஷப் பண்டை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகையான ரூ.27 கோடிக்கு வாங்கியது.

இந்நிலையில் ரிசப் பண்ட் குறித்து டெல்லி அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஜிந்தால் தனது எக்ஸ் பக்கத்தில் உணர்ச்சிப்பூர்வமாக பதிவிட்டுள்ளார். அதில்,

"நீ எப்போதும் என் இளைய சகோதரனாகவே (தம்பி) இருப்பாய். இதனை எனது அடிமனதிலிருந்து சொல்கிறேன் நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உங்களது முயற்சிக்கு எப்போதும் நான் துணை நிற்பேன். எங்கள் அணியிலிருந்து நீங்கள் விலகுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அதே போன்று எங்களது அணியுடன் உங்களை தக்கவைக்க நான் எவ்வளவோ முயன்றேன். ஆனாலும் நீங்கள் வெளியேறியதில் வருத்தம். இருந்தாலும் நாங்கள் உங்களை எப்போதுமே நேசிக்கிறோம். நிச்சயம் ஒருநாள் உங்களுடன் மீண்டும் இணைவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்