< Back
கிரிக்கெட்
ஆர்.சி.பி. அணிக்கு அந்த 4 வீரர்கள் தேவை - டி வில்லியர்ஸ் யோசனை
கிரிக்கெட்

ஆர்.சி.பி. அணிக்கு அந்த 4 வீரர்கள் தேவை - டி வில்லியர்ஸ் யோசனை

தினத்தந்தி
|
7 Nov 2024 9:41 PM IST

ஐபிஎல் மெகா ஏலம் வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் நடைபெற உள்ளது.

கேப்டவுன்,

ஐ.பி.எல். 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது . ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் நடைபெற உள்ளது.

நட்சத்திர வீரர்களை கொண்டுள்ள ஆர்.சி.பி. அணி, ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல ஒவ்வொரு ஆண்டும் போராடி வருகிறது. இந்த நிலையில், தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனும், ஆர்.சி.பி. அணிக்காகவும் விளையாடிய ஏபி டி வில்லியர்ஸ், அணிக்கு 4 முக்கிய வீரர்கள் தேவை என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்;

"ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பொறுத்தவரை அவர்களது ஹோம் கிரவுண்டை (எம் சின்னசாமி மைதானம்) புரிந்து கொண்டு விளையாடும் அணியை உருவாக்க வேண்டும். ஐபிஎல் மெகா ஏலத்தில் சாஹல், அஸ்வின், ககிசோ ரபாடா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகிய 4 வீரர்களுக்கு அதிக தொகையை ஆர்.சி.பி. செலவிடலாம். நல்ல விஷயம் என்னவென்றால், நம்மிடம் விராட் இருக்கிறார். வீரர்களை தக்கவைப்பதில் நாம் அதிக தொகையை செலவிடவில்லை. இன்னும் செலவிட அதிக தொகை இருப்பது நல்ல விஷயம்." என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்