< Back
கிரிக்கெட்
ரஞ்சி டிராபி அரையிறுதி; மும்பை அணியில் ஜெய்ஸ்வால் சேர்ப்பு

image courtesy: AFP

கிரிக்கெட்

ரஞ்சி டிராபி அரையிறுதி; மும்பை அணியில் ஜெய்ஸ்வால் சேர்ப்பு

தினத்தந்தி
|
14 Feb 2025 11:30 AM IST

ரஞ்சி டிராபி தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் மும்பை அணி விதர்பாவை எதிர்கொள்கிறது.

மும்பை,

90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இந்த தொடரின் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்களின் முடிவில் குஜராத் - கேரளா, மும்பை - விதர்பா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. அரையிறுதி ஆட்டங்கள் வரும் 17ம் தேதி தொடங்குகின்றன.

குஜராத் - கேரளா இடையிலான அரையிறுதி ஆட்டம் அகமதாபாத்திலும், மும்பை - விதர்பா இடையிலான அரையிறுதி ஆட்டம் நாக்பூரிலும் நடக்கின்றன. இந்நிலையில், விதர்பாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்திற்கான மும்பை அணியில் இளம் அதிரடி ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டதை அடுத்து ஜெய்வால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் ரஞ்சி டிராபி தொடருக்கான மும்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை அணி விவரம்: அஜிங்யா ரகானே (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, அன்கிரிச்க் ரகுவன்ஷி, அமோக் பட்கல், சூர்யகுமார் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சித்தேஷ் லாட், ஷிவம் துபே, ஆகாஷ் ஆனந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் தாமோர் (விக்கெட் கீப்பர்), சூர்யன்ஷ் ஷெட்ஜே, ஷர்துல் தாக்கூர், ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோட்யன், மொஹித் அவஸ்தி, சில்வெஸ்டர் டிசோசா, ராய்ஸ்டன் டயஸ், அதர்வா அன்கோலேகர், ஹர்ஷ் தன்னா.

மேலும் செய்திகள்