< Back
கிரிக்கெட்
ரஞ்சி டிராபி; ரெயில்வே அணிக்கு எதிரான ஆட்டம்... முதல் இன்னிங்சில் தமிழகம் 438 ரன்கள் குவிப்பு

Image Courtesy: @TNCACricket

கிரிக்கெட்

ரஞ்சி டிராபி; ரெயில்வே அணிக்கு எதிரான ஆட்டம்... முதல் இன்னிங்சில் தமிழகம் 438 ரன்கள் குவிப்பு

தினத்தந்தி
|
15 Nov 2024 1:49 PM IST

தமிழகம் தரப்பில் அதிகபட்சமாக முகமது அலி 91 ரன்கள் எடுத்தார்.

அகமதாபாத்,

90-வது ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் 'எலைட்' பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. இதன் 5வது கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் தமிழக அணி ரெயில்வே அணியை எதிர்கொண்டு ஆடி வருகிறது. இந்த ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தமிழக அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ரெயில்வே அணி 229 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தமிழகம் தரப்பில் அஜித் ராம் 4 விக்கெட்டும், குர்ஜப்னீத் சிங், சோனு யாதவ், லக்சய் ஜெய்ன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழகம் நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டை இழந்து 324 ரன்கள் குவித்திருந்தது.

தமிழகம் தரப்பில் முகமது அலி 37 ரன்னுடனும், அஜித் ராம் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த தமிழகம் தனது முதல் இன்னிங்சில் 438 ரன்கள் குவித்துள்ளது. தமிழகம் தரப்பில் அதிகபட்சமாக முகமது அலி 91 ரன்கள் எடுத்தார். ரெயில்வே தரப்பில் குனால் யாதவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் தமிழக அணி 209 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து ரெயில்வே தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.

மேலும் செய்திகள்