'விராட், ரோகித்தின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால் இவர்கள்தான்...' - தினேஷ் கார்த்திக்
|ஹர்திக் பாண்ட்யா வேடத்தில் சந்தேகத்துக்கு இடமின்றி ரன்வீர் சிங்தான் நடிப்பார் என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.
சென்னை,
பிரபலங்களின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கும் டிரண்ட் இந்திய சினிமாவில் கோலோச்சி வருகிறது. அதிலும் முக்கியமாக விளையாட்டு வீரர்களின் தன்னபிக்கையூட்டும் கதைகள் சினிமா மூலம் சொல்லப்பட்டு வருகிறது. தங்கல், எம்.எஸ் தோனி உள்ளிட்ட படங்கள் அதற்கு சிறந்த எடுக்காட்டாகும்.
சமீபத்தில், இந்தியாவுக்காக பாரா ஒலிம்பிக்கில் முதல் முதலில் தங்கப்பதக்கம் வென்ற முரளிகாந்த் பெட்காவின் வாழ்க்கை வரலாறு 'சந்து சாம்பியன்' என்ற பெயரில் பாலிவுட்டில் திரைப்படமாக உருவானது.
இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரங்களாக உள்ள வீரர்களின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டால் அவர்களின் வேடங்களில் யார் நடித்தால் நல்லா இருக்கும் என்பது குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது, 'விராட் கோலியாக நடிகர் ரன்பீர் கபூர் நடித்தால் நல்லா இருக்கும். அவர் கோலி விளையாடும் விதத்தை தெளிவாக வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன். கேப்டன் ரோகித் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதி பொருத்தமாக இருப்பார். ஏனென்றால், அவரிடம் நகைச்சுவை உணர்வு அதிகம், அதேசமயத்தில், கடுமையாகவும் இருப்பார்.
ஹர்திக் பாண்ட்யா வேடத்தில் சந்தேகத்துக்கு இடமின்றி ரன்வீர் சிங்தான். வேறு யாரும் அவரது வேடத்தில் நடிக்க பொருத்தமாக இருக்கமாட்டார். அதேபோல, பும்ராவாக ராஜ்குமார் ராவும், சூர்யாகுமாராக சுனில் ஷெட்டியும் நடித்தால் பொருத்தமாக இருக்கும் ', இவ்வாறு கூறினார்.